தென்கொரியாவில் மருத்துவர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்தால் அறுவை சிகிச்சைகளும் மருத்துவ சேவைகளும் தடைப்பட்டுள்ளன.
தென் கொரிய அரசாங்கத்தின் மருத்துவ கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நோயாளர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
தென் கொரியாவில் மருத்துவர் – நோயாளி விகிதங்கள் மிகக் குறைவாக உள்ளதால், பயிற்சி மருத்துவர்களை பணிகளில் இணைக்கும் திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளது.
தென் கொரியா மருத்துவர்கள் உலகிலேயே அதிக ஊதியம் பெறுபவர்களாக உள்ளனர். 2022 ஆம் ஆண்டு வௌியான Organisation for Economic Co-operation and Development (OECD) அறிக்கையின் தரவுகளுக்கு அமைய, ஒரு பொது மருத்துவமனையில் மருத்துவ நிபுணர் ஒருவருக்கு சராசரியாக வருடத்திற்கு $200,000 ஊதியம் கிடைக்கிறது. இது தேசிய சராசரி ஊதியத்தை விட மிக அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுமார் 6,500 மருத்துவர்கள் தமது இராஜினாமா கடிதத்தை நேற்று (19.02) கையளித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க