தலைமன்னாரில் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று (19.02) காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன் குறித்த கிராம மக்கள் சிறுமியின் மரணத்திற்கு தாமதம் இன்றி நீதி கிடைக்க வேண்டும் என கோரியும் விசேட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று குறித்த வழக்கை விசாரிக்க கோரியும் தலைமன்னார் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் குறித்த சந்தேக நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ள நிலையில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் குறித்த அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க