இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

தற்காலிகமாக கைவிடப்படவுள்ள சுகாதார தொழிற்சங்கங்களின் போராட்டம்

சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பை இன்று (3) காலை 6.30 மணி முதல் தற்காலிகமாக நிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் நேற்று (02.02.2024) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் எட்டப்பட்டதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் தலையீட்டின் பேரில், சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புடன் பெப்ரவரி 6 ஆம் திகதி  ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு எழுத்து மூலம் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து நோயாளர்களுக்கு தற்போது ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பெப்ரவரி 6 ஆம் திகதி நடைபெறவுள்ள கலந்துரையாடலில் இப்பிரச்சினைக்கு சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில், எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுப்பதற்கு அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களும் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க