சினிமாசினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள “அனிமல்” திரைப்படம்

பொலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர், இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் “அனிமல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியிருந்ததது. இந்த படம் மோசமான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படம் வருகிற 26-ந் திகதி குடியரசு தினத்தை முன்னிட்டு ‘நெட்பிளிக்ஸ்’ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

திரையரங்க வெளியீட்டின் போது சென்சரில் நீக்கப்பட்ட சுமார் 8 நிமிட காட்சிகளும் ஓடிடியில் வெளியாகும் பதிப்பில் இடம்பெறும் என படத்தின் இயக்குனர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதன்படி ஓடிடியில் வெளியாகும் அனிமல் திரைப்படத்தின் மொத்த நீளம் (RUN TIME) 3 மணிநேரம் 30 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. திரையரங்கில் வெளியான போது படத்தின் மொத்த நீளம் 3 மணிநேரம் 20 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க