சினிமாசினிமா

ஒஸ்கர் விருது பெறும் இந்திய இயக்குனரின் ஆவணப்படம்!

சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகவும், மிகப்பெரிய கௌரவமாகவும் கருதப்படுவது ஒஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

அந்தவகையில் 96வது ஒஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வருகிற மார்ச் 10ம் திகதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஒஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவில் பிறந்த கனடா நாட்டு இயக்குனர் இயக்கிய ‘To Kill a Tiger‘ என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் தேர்வாகியுள்ளது. இதில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமையையும், அதைத்தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக சிறுமியின் தந்தை நடத்திய சட்டப்போராட்டத்தையும் மையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று மிகப்பெரிய கவனத்தையும் பெற்றுள்ளது.

Also Read:ஜெயிலர்-2 வில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்!

Also Read: நடிகர் பார்த்திபனின் அடுத்த பட டைட்டில் வெளியீடு

கருத்து தெரிவிக்க