VAT வரி அறவிடாமல் நுகர்வோர் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நாடு முழுவதும் VAT FREE SHOP என்ற தொடர் கடைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
தமது அதிகார சபைக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் மற்றும் இயங்கக்கூடிய இடங்கள் உள்ளதால், ஆராய்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
காய்கறிகள், அரிசி மற்றும் குழந்தைகளுக்கான பால் மா போன்ற VAT அல்லாத பொருட்களுக்கான கடைகளை நாடு முழுவதும் நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க