இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்து

அடுத்த வாரமளவில் மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஆணைக்குழுவின் விதிகளுக்கு உட்பட்டு மின் கட்டண திருத்தம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பினால் மின்சார சபைக்கு ஓரளவு இலாபம் கிடைத்துள்ளதால், மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கடந்த ஒக்டோபர் மாதம், 18 வீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை 100 வீதமாக அதிகரிப்பதை நீக்குமாறு எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழு அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளதுடன் மின் கட்டணத்தை அரசு கணிசமாக குறைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் சங்கங்கள் இலங்கை மின்சார சபைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.

Also Readஅரச ஊழியர்களின் சம்பளம் குறித்து வெளியிட்டுள்ள தகவல்

Also Readநாட்டில் குறைந்து வரும் காற்றின் தர சுட்டெண்

 

கருத்து தெரிவிக்க