சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அதன் பிரதிப் பணிப்பாளர் நாயகம் எஸ்.எம். ஆர்னல்ட் தட்டம்மை தடுப்பூசி செலுத்தப்படாத சிறுவர்களுக்கு எதிர்வரும் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
9 மாதங்கள் முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கும், 6 மாதம் முதல் 9 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கான தட்டம்மை தடுப்பூசியும் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு சென்று குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க