நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்படவுள்ளதாகவும் இதனை ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 26ஆம் திகதி நள்ளிரவு முதல் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி செயலகம் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய 16வது நாடாளுமன்றத்தின் அடுத்த ஆரம்பம் பொதுத் தேர்தலுக்குப் பின்னரே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடங்களைப் போலன்றி, ஜனாதிபதி விக்ரமசிங்க சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற மாட்டார் எனவும் ஆயுதப்படை பொலிஸ் அணிவகுப்பில் கௌரவ விருந்தினராக மாத்திரமே கலந்துகொள்வார் என குறிப்பிடப்படுகிறது. மாறாக, நாடாளுமன்றத்தை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்த பிறகு அவர் வெளியிடும் கொள்கைப் பிரகடனம் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றும் உரையாக இருக்கும் என்பதோடு இது நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்த பிறகு அவர் வெளியிடும் கொள்கைப் பிரகடனம் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றும் உரையாக இருக்கும் எனவும் இது நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.பொருளாதார வளர்ச்சி முக்கியத்துவம், நோக்கி அவர் எடுத்த நடவடிக்கைகளும் அவரது உரையாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க