இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சுகாதார ஊழியர்கள் கோரும் ஊதிய உயர்வு நியாயமானதல்ல- சுகாதார அமைச்சு

சுகாதார ஊழியர்கள் சம்பள உயர்வுக்கு தகுதியானவர்களாக இருந்தாலும் இந்நேரத்தில் சுகாதார தொழிற்சங்கங்கள் கோரும் ஊதிய உயர்வு நியாயமானதல்ல என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருத்துவர்களுக்கான இடையூறு, இருப்பு மற்றும் போக்குவரத்து (DAT) கொடுப்பனவை 35,000 ரூபாயாக உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அடையாள வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் முதல் கடமை பொது மக்களுக்கு பொருத்தமான சுகாதார சேவைகளை வழங்குவதாகும். எனவே வைத்தியர்களுக்கு அவர்களின் தொழில் தரத்திற்கமையவே கொடுப்பனவுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அனைத்து வசதிகளும்  செய்து தரப்படுவதை சுகாதார அமைச்சு உறுதி செய்வதுடன்  தற்போது தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்தும் முறைப்பாடு நியாயமானது அல்ல” என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜி விஜேசூரிய சுட்டிக்காட்டினார்.

இன்று காலை வேலை நிறுத்த போரட்டம் முடிவடைந்த போதிலும், அடுத்த வாரம் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க