புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1ஆம் திகதி உலகம் முழுவதும் பெரும்பாலான பங்குச் சந்தைகள் மூடப்பட்டிருந்தன. ஜனவரி 2ஆம் திகதி சந்தைகள் துவங்கியபோது, பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு காணப்பட்டது. இதன் காரணமாக, இந்த ஆண்டின் முதல் வர்த்தக நாளிலேயே உலகப் பணக்காரர்களின் பட்டியலும் தலைகீழாக மாறியது.
இருப்பினும் உலக பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க