இந்த பதிவில் 27 நட்சத்திரங்களில் சுவாதி முதல் உத்திராடம் வரையான நட்சத்திரங்களின் பொதுப்பலன்களை காணலாம்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- இறைநம்பிக்கை மிகுந்தவர்கள்.
- சிறந்த அறிவு, ஞாபக சக்தி கொண்டவர்கள்.
- கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.
- தன்னம்பிக்கை கொண்டவர்கள்.
- வலிமையான உடல் அமைப்பு உடையவர்கள்.
- நேர்மையாக பேசுபவர்கள்.
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- பணம் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.
- வாக்குத்திறமை கொண்டவர்கள்.
- வியோபாரத்தில் நோட்டம் கொண்டவர்கள்.
- சாமர்த்தியமான செயல்பாடுகளை உடையவர்கள்.
- சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.
அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- எதிர்கால திட்டங்களில் விருப்பம் உடையவர்கள்.
- எல்லோரும் விரும்பக் கூடியவர்கள்.
- நேர்மையானவர்கள்.
- பெற்றோரை பேணிக்காப்பவர்கள்.
- மேன்மையான பதிவிகளை வகிக்கக் கூடியவர்கள்.
- மற்றவர்களின் மனம், குணம் அறிந்து செயல்படுவதில் சிறந்தவர்கள்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- உண்மையை பேசக்கூடியவர்கள்.
- இறை நம்பிக்கை உடையவர்கள்.
- உடன் பிறப்புகள் மீது அன்பு கொண்டவர்கள்.
- கல்வியில் தேர்ச்சி உடையவர்கள்.
- தைரியமும், துணிச்சலும் இயல்பாக இருக்கும்.
- நகைச்சுவை உணர்வு மிகுந்தவர்கள்.
- அழகான சுருக்கமான பேச்சுகளில் சிறந்தவர்கள்.
மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவார்கள்.
- நேர்மையானவர்கள்.
- புகழப்படும் காரியங்களை செய்வதில் ஆர்வம் உடையவர்கள்.
- உறவினர்களுடன் சேராதவர்கள்.
- சுறுசுறுப்பாகச் செயல்படுவோர்கள்.
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவார்கள்.
- தன்னை சார்ந்தவர்களை பேணிகாப்பவர்கள்.
- அழகு உடையவர்கள்.
- பரந்த மனம் உடையவர்கள்.
- செல்வாக்கு நிறைந்தவர்
- மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்ககூடியவர்கள் .
உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- நுணுக்கமான பேச்சுத்திறமை உடையவர்கள்.
- சுறுசுறுப்பான மனநிலையை உடையவர்கள்.
- சேமிப்பில் நாட்டம் உடையவர்கள்.
- கலைளில் ஆர்வம் உடையவர்கள்.
- பொறுமையும், இனிமையும் இவர்கள் பேச்சில் இருக்கும்.
கருத்து தெரிவிக்க