இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் நேற்று (01) கையளிக்கப்பட்டுள்ளது.
வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது.
இந்த குழுவில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
குறித்த குழுவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் புதிய விளையாட்டு சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க