2023ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 7.5 கோடி அதிகரித்திருப்பதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு நிலையம் ( US Census Bureau) தெரிவித்துள்ளது.
புத்தாண்டு தினத்தில் 800 கோடியைக் கடந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஒவ்வொரு நொடிக்கும் 4.3 பிறப்பு மற்றும் 2 இறப்புகளை எதிா்பாா்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மக்கள்தொகை கடந்த ஆண்டில் 17 இலட்சமாக அதிகரித்துள்ளது. புத்தாண்டு தினத்தில் அது 33.58 கோடியாக இருக்கும். அந்நாட்டின் நிகழாண்டு மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் 0.53% மட்டுமே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போக்கு நீடித்தால், 2020 முதல் 2030 வரையிலான 10 ஆண்டுகளே அமெரிக்க வரலாற்றில் குறைந்த மக்கள்தொகை வளா்ச்சி கொண்ட காலகட்டமாக இருக்கும். அதன்படி, 2030-ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில், அமெரிக்காவின் மக்கள்தொகை வளா்ச்சி 4 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1960-2000 காலகட்டத்தில் உலக மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது. பெண்கள் கருவுறும் விகிதம் தொடா்ச்சியாக குறைந்து வருவது உலக மக்கள்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணமாகும்.
கருத்து தெரிவிக்க