பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் மேலே செல்வதற்கான 300 மீட்டர் பகுதி காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈபிள் கோபுரத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் நடந்த ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இருப்பினும், 134 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈபிள் கோபுரத்தின் கீழே கண்ணாடியால் மூடப்பட்டுள்ள திறந்தவெளி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள், மக்கள் அனுமதிக்கப்படுவார்களென தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க