வரும் ஜனவரி மாதம் முதல் தண்ணீர் கட்டணம் 3% அதிகரிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் VAT திருத்தத்தின் காரணமாக தண்ணீருக்கு 3% பெறுமதி சேர் வரி விதிக்கப்படும் என அதன் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத கஜவீர ஆராச்சி தெரிவித்துள்ளார்.
அதன்படி, குடிநீர் கட்டணம் 18% மாக உயரும் எனவும் தற்போது தண்ணீருக்கு 15% VAT விதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க