இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக ‘காட்போட்’ மட்டையிலான வாக்குப்பெட்டிகள் இத்தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நன்கு கனதியான கார்ப்போர்ட் மட்டைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட வாக்குப்பெட்டிகள் கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களால் அண்மையில் தயார் செய்யப்பட்டது.
இவ்வாறு தயார் செய்யப்பட்ட பெட்டிகளே நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இருப்பினும் கடந்தகால தேர்தல் வரலாற்றில் மரப்பலகையினாலான வாக்குப்பெட்டிகளே பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்படத்தக்கது.
கருத்து தெரிவிக்க