இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் உலகளவில் பெரும் பொருளாதார நெருக்கடி கொரோனாவால் உருவாகியுள்ளதாக ஐநா பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி கிட்டத்தட்ட 8 மாதங்களாக உலகம் முழுவதையும் முடக்கியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும் 6 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றன
இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் பற்றி குறிப்பிட்ட ஐநா சபையின் பொதுச் செயலாளர் அந்தனியோ குட்ரெஸ் ” கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸிடம் உலகம் மண்டியிட்டுள்ளது. இந்த தொற்று நோய் நமது பலவீனத்தை வெளிக்காட்டியுள்ளது. இந்த தொற்று நோயால் முறைசாரா அமைப்பின் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் என பலரும் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். வல்லரசு நாடுகளை விட வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. இதனால் உலகம் முழுவதும் சுமார் 10 கோடி மக்கள் கடுமையான வறுமை நிலைக்கு செல்லும் அபாயம் உள்ளது” என அவர் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க