கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எடு;த்த தீர்மானத்தை கட்சியின் முன்னாள் தலைவர் சந்திரிகா குமாரதுங்க கண்டித்துள்ளார்.
இது முழுமையாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை காட்டிக்கொடுத்த செயல் என்று அவர் விமர்சித்துள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகரவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த குற்றச்சாட்டை அவர் சுமத்தியுள்ளார்.
கட்சியின் 90வீதமான அமைப்பாளர்கள் கோட்டாவுக்கு எதிராக இருக்கின்றபோது கட்சி எவ்வாறு அவருக்கு ஆதரவை வழங்கமுடியும் என்று சந்திரிக்கா கேள்வி எழுப்பியுள்ளார்.
நடப்பு தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நலிவடையச்செய்துவிட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியுடன் நல்லிணக்க அரசாங்கத்தில் இணைந்தமை காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நலிவடையவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் தலைவர் கட்சியை கொண்டு செல்ல தைரியம் இல்லாதவராகிவிட்டார்.
அத்துடன் ராஜபக்சவி;டம் முட்டாளாக்கப்பட்டு கட்சியை நாசப்படுத்தியுள்ளார் என்றும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
மைத்ரி கட்சியின் தலைமைத்துவத்தை விட்டு விலகினால் அதனை தயாசிறி ஜெயசேகர பொறுப்பேற்றிருக்கலாம்.
அதற்கு தாம் ஆதரவளித்திருக்கலாம் என்று சந்திரிக்கா குறி;ப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மைத்ரியின் தனிப்பட்ட நலனுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை நாசப்படுத்தமுடியாது என்றும் சந்திரிக்கா தயாசிறி ஜெயசேகரவிடம் வலியுறுத்தியுள்ளார்
கருத்து தெரிவிக்க