பொன்மொழிகள்

நட்பு! சாணக்கியர்

  • ஒவ்வொரு நட்புறவிலும் கொஞ்சம் சுயநலம் உள்ளது. சுயநலமற்ற நட்புறவு இல்லவேயில்லை. இதுதான் கசப்பான உண்மை!
  • உங்களை விட தகுதியில் உயர்ந்தவர்களிடமோ, தாழ்ந்தவர்களிடமோ நட்பு பாராட்டாதீர்கள், இந்த நட்பினால் மகிழ்ச்சி ஏற்படாது.
  • அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும்.
  • நமக்கு முக்கியமான ரகசியங்களை நாமே பாதுகாக்காமல் நமது நண்பரிடம் கூறும் போது, அவரும், அதனை அவரது நண்பரிடம் கூற மாட்டார் என்பதில் என்ன உறுதி இருக்கிறது.

கருத்து தெரிவிக்க