உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சுஹத கம்லத் பதவி விலகவுள்ளார்.

சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் சுஹத கம்லத் பதவி விலகவுள்ளார்.

கோட்டாய ராஜபக்சவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அழுத்தம் கொடுப்பதாக சுஹத கம்லத் செய்தித்தாள் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அரச அதிகாரி அதுவும் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான அதிகாரசபையின் தலைவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளமை பாரதூரமானது என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரள இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சுஹத கம்லத், இந்தக்குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு பதவிவிலகப்போவதாக அறிவித்துள்ளார்.

எனினும் அவர் பதவிவிலகாது போனால் ஜனாதிபதியின் செயலாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க