ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைகளில் இருந்து இலங்கையை ஐக்கிய நாடுகளின் அமைதிகாப்பு திணைக்களம் தடைசெய்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சு நடத்தவுள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது
தற்போது ஐக்கிய நாடுகளின் 74வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள இலங்கையின் குழு இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அமைதிகாப்பு உதவிசெயலரை சந்தித்து பேசவுள்ளது.
மனித உரிமைகள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவை இராணுவத்தளபதியாக நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஐக்கிய நாடுகளின் அமைதிகாப்பு திணைக்களம் இலங்கையின் படைவீரர்களை தடைசெய்துள்ளது.
கருத்து தெரிவிக்க