வவுனியா பொது வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று காலை 10மணிமுதல் 11மணிவரையான ஒரு மணி நேரம் கழிக்கப்பட்ட மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக்கோரி அடையாள வேலை நிறுத்தம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புரட்டாதி மாதம் தாதியர்களின் சம்பளமானது கடமை தவிர்ந்த மேலதிக கடமைக்குரிய கொடுப்பனவு எதுவித எழுத்து மூலமான அறிவித்தலும் இன்றி கணக்காளர், கொடுப்பனவுப்பிரிவு உத்தியோகத்தர்களும் இணைந்து தாதியர்களின் கொடுப்பனவுகள் கழிக்கப்பட்டுள்ளது.
பழைய ஒரு சுற்று நிரூபத்தினடிப்படையில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடம் குறித்து சரியான விளக்கங்களும் எவையும் பெற்றுக்கொள்ளாமல் வவுனியா பொது வைத்தியசாலையில் மட்டும் இச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இது குறித்து சரியான விளக்கங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு கழிக்கப்பட்ட தாதிய உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை மீளச் செலுத்துமாறு கோரியும் தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறமலிப்பதற்கும் இன்று காலை 10மணிமுதல் 11மணிவரையும் அடையாள வேலை பணிப்புறக்கணிப்பும் இதற்குச் சரியான தீர்வு எட்டப்படாவிட்டால் தொடர்ச்சியாக வடமாகாணம் தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள தாய்ச்சங்க்களின் அறிவுறுத்தல்களுக்கேற்ப நாம் இணங்கியுள்ளோம்.
இந்நடவடிக்கை மேற்கொண்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோருகின்றோம்.
எமது தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளர்களுக்கு ஏற்படும் பராமரிப்பு பாதிப்புகளுக்கு இதில் எமது சங்கம் எதுவிதமான பொறுப்பும் ஏற்றுக்கொள்ளாது முற்று முழுதாக நிர்வாகத்தையே சார்ந்ததாக இருக்கும் என்று அரச தாதிய உத்தியோகத்தர்களின் சங்கத்தினால் வழங்கப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள் அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் கொழும்பு அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் வடமாகாணம் ஆகிவற்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க