வவுனியாவில் சுயாதீன இளைஞர்கள் ஒன்றிணைந்து வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நீராவயடி பிள்ளையார் ஆலத்தில் இடம் பெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் ஆலைய வளாகத்துக்குள் பௌத்த பிக்குவின் உடல் எரிக்கப்பட்டமை மற்றும் நீதித்துறையை அவமதித்தமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் வவுனியா சுயாதீன இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன் ஆகியோரும் முன்னால் மாகாணசபை உறுப்பினர்கள் ,மற்றும் பல்பேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
சுயாதீன இளைஞர்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டனர்.
இதன்போது போராட்டக் களத்தை அரசியலுக்காக பயன்படுத்துவதாகக் கூறி போராட்டக்காரர்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பையும், ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களையும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களையும் கடுமையான வார்த்தைப் பிரியோகங்களினால் வஞ்சித்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் இலாபம் தேட முற்படவேண்டாம் என்று ஆர்பாட்டக்காரர்கள் அரசியல் வாதிகளுக்கு கடுமையான தொனியில் கூறிய அதேவேளை ஆர்ப்பாட்டக்களம் சிறிது நேரம் குழப்பகரமாக காணப்பட்ட அதேவேளை கருத்து முறன்பாடுகளுடன் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க