அமேசான் காடு உலகின் நுரையீரல் இல்லை எனப் பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ ஐ.நாவில் தெரிவித்தார்.
ஐ.நா சபையில் நடந்த வருடாந்திர கூட்டத்தில் பேசும் போது அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
“அமேசான் ஒன்றும் தீக்கிரையாக்கப்படவில்லை. சர்வதேச சமூகம் நேரில் வந்து பார்த்துக்கொள்ளலாம்” என்றார்.
அமேசான் குறித்து உலக சமூகத்திடம் தவறான புரிதல் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் குதர்க்க வாதம் செய்கிறார்கள்.
“அமேசான் மனிதக்குலத்தின் பொக்கிஷம் என்ற தவறான புரிதல் மக்களிடம் உள்ளது. அது போல அமேசான் காடு இவ்வுலகத்தின் நுரையீரல் என்ற தவறான கருத்தும் நிலவுகிறது” என்று பொல்சனாரூ கூறினார்.
கருத்து தெரிவிக்க