உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னாரில் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மீட்பு

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் வீதியில் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 30 வயதுடைய நபர் ஒருவரை மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடற்படை மற்றும் மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
230 கிராம் எடை கொண்ட குறித்த ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்ற மன்னாரை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட குறித்த ஐஸ் போதைப்பொருள் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருஸாந்தன் தலைமையில் பொலிஸ் சார்ஜன் நிமால் (57615), பொலிஸ் கொஸ்தபில்களான சிசர(39152), குணசிங்க(74927), அருண்(5929), டிரோன்(6565),பொலிஸ் சாரதி பெணாண்டோ (3105) ஆகியோர் இணைந்து குறித்த போதைப்பொருளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க