நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்கும் யோசனைக்கான அவசர அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையின் பேரிலேயே அழைக்கப்பட்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்தக்கூட்டத்தை ஜனாதிபதியே கூட்டினார் என்று முன்னதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
எனினும் இன்று மாத்தளையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கருத்துரைத்த ஜனாதிபதி, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் திட்டம் தமது அரசியலில் உள்ளது என்றபோதும் ஜனாதிபதி தேர்தல் அழைக்கப்பட்டுள்ள நிலையில் இதனை செய்வதென்பது நகைச்சுவையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விசாரணை குழுவின் முன்னால் தாம் சாட்சியமளித்தபோது ஊடகவியலாளர்களை அனுமதிக்கவேண்டாம் என்று தாம் கூறவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க