இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று அனுஸ்டிக்கபட்டது.
இந்து சமய அறநெறிக்கல்வியின் முக்கியத்துவத்ததை உணர்த்தும் விதமாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இம்மாதம் 1 ஆம் திகதி முதல் 30ம் திகதி வரை நாடு முழுவதும் இந்து சமய அறநெறி கல்வி கொடிதினத்தை அனுஸ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
அந்தவகையில் குறித்த நிகழ்வு இன்றயதினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்ட செயலாளர் நா,கமலதாஸ் தலைமையில் நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றபட்டு, அறநெறி கீதம் இசைக்கபட்டு ஆரம்பமான குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறநெறி கொடிகள் வழங்கிவைக்கப்பட்டது..
நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்ட வவுனியா மாவட்டசெயலர் எம்.கனீபா அறநெறி கல்வியின் முக்கியத்துவம் தொடர்பாக உரையாற்றியிருந்தார்.
நிகழ்வில் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், உத்தியொகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.
கருத்து தெரிவிக்க