இலங்கை இராணுவத்தின் கள பயிற்சியான கோமரன்ட் ஸ்ரைக் 2019 எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.
கடந்த 3 ஆம் திகதியன்று இந்த பயிற்சி ஆரம்பமானது.
இந்தநிலையில் 13ஆம் திகதியன்று மத்திய வங்கி கட்டிடத்தில் ஒத்திகை ஒன்று நடத்தப்பட்டது.
இதன்போது பயங்கரவாதிகள் மத்திய வங்கி கட்டிடத்துக்குள் ஊடுருவி துப்பாக்கி பிரயோகம் செய்வதாகவும் பலர் கொல்லப்பட்டு பலர் காயமடைந்துள்ளதாகவும் கிடைத்த புலனாய்வுத் தகவல்களை கருத்திற்கொண்டு பயி;ற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பெல் 212 ரக ஹெலிகொப்டரும் பயன்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கு மத்தியில் அகப்பட்டுள்ளவர்களை காப்பாற்றும் பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தொடர் பயிற்சியில் 2400 இராணுவத்தினர்,400 கடற்படையினர் 200 வான் படையினர் பங்கேற்றுள்ளனர்.
இதனை வெளிநாடுகளின் 100 இராணுவ அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க