உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘சு.கவின் புண்ணியத்தாலேயே மஹிந்த அணி வாழ்கிறது’ – மைத்திரி விளாசல்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புண்ணியத்தாலேயே மஹிந்தவும் அவரின் சகாக்களும் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர் – என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று 15 தெரிவித்தார்.

சுதந்திரக்கட்சியின் மாவட்ட மட்டத்திலான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” ஊழல் அற்ற ஆட்சியை முன்னெடுப்பதற்காகவே 2015 இல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தேன். ஆனால், ரணில் பலவழிகளிலும் ஊழல் செய்தார்.

இதனால் ஒக்டோபர் புரட்சியில் ஈடுபட்டேன். மஹிந்தவை பிரதமராக்கினேன். கூட்டு எதிரணியின் கோரிக்கைக்கமைய நாடாளுமன்றத்தையும் கலைத்தேன்.

மறுநாள் காலையே ஓடிச்சென்று கூட்டு எதிரணியினர் தாமரை மொட்டில் உறுப்புரிமை பெற்றனர். இவ்விடயம் நாடாளுமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டது.

அவர்கள் இன்னும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில்தான் அங்கம் வகிக்கின்றனர் என்ற கடிதத்தை மஹிந்த அமரவீர வழங்கியிருக்காவிட்டால் இந்நேரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்க முடியாது. இதை மறந்துவிட்டு சிலர் இன்று எமக்கு எதிராக கருத்துகளை முன்வைக்கின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் எமது ஆதரவு இன்றி எவராலும் வெற்றி பெறமுடியாது.” என்றார் மைத்திரி.

 

 

கருத்து தெரிவிக்க