சினிமா

விஷால், சுந்தர். சி மற்றும் ஹிப்ஹாப் ஆதியின் கூட்டணியில் “ஆக்‌ஷன்”

சுந்தர். சி இயக்கத்தில், விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ஆக்ஷன். டிரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் தலைப்புக்கேற்றபடி டீசர் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே அதிகம் இடம் பெற்றுள்ளது. அதிலும் ஹொலிவுட் ஆக்ஷனைப் பார்ப்பது போல உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தமன்னா, ஐஸ்வர்யா லட்சமி என இரண்டு நாயகிகள் இருப்பதால் படத்தில் காதலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம். முக்கியமாக இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் கபிர் சிங் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஆக படம் விருவிருப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்‌ஷன் படத்தின் டீசர் இதோ! 

கருத்து தெரிவிக்க