சினிமா

ஜோடியோ பாடல்களோ இல்லாத படத்தில் கார்த்தி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‛கைதி’ படம், தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தில்  நரேன், ரமணா, தீனா, யோகிபாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எனினும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியோ, பாடல்களோ இல்லை. காரணம், படம் அந்தளவுக்கு விறுவிறுப்பாக, ஆக்சன் கலந்த த்ரில்லர் கதையில் நகருகிறது. அதேசமயம் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க