உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

பலாலி விமானநிலையம் யாழ்ப்பாண விமான நிலையமாக மாறும்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தைபோல் கம்பீரமாக, அழகாக யாழ்.மாநகரசபை கட்டிடமும் எழுந்து நிற்கும். என கூறியிருக்கும் பிரதமா் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றாா்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் என்னிடம் எப்போது கட்டடம் வரப்போகிறது. எப்பொழுது நிதி ஒதுக்கப்போகிறீர்கள் எப்பொழுது இதை செய்யப்போகிறீர்கள் என எந்த சந்தர்ப்பத்திலும் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருப்பார்

என்னிடம் கேட்பார் அமைச்சிடம் கேட்பார் இப்படியாக யாழ்.மாநகரத்தை கட்டியெழுப்பும் பணியில் அவரது பங்களிப்பு பாராட்டவேண்டியதாகும் இவ்வாறானவர்கள் தான் எமக்கு கட்டாயமாக தேவையாகும் கைகொடுத்துக்கொள்ள வேண்டியவர் என குறிப்பிடுகின்றேன்.

யாழ்ப்பாண கலாசார மண்டபம் அமைக்கப்படுகிறது. இதற்கு இந்தியா நிதி உதவியளித்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். அதேபோல சந்தைத் தொகுதியை அமைத்து வருகின்றோம் அதையும் பூர்த்தி செய்வோம்,

நெடுந்தூர பேரூந்து நிலைய கட்டடம் அமைக்கப்படுகிறது அதனையும் பூர்த்தி செய்வோம் அது நிறைவுறும் தறுவாயில் உள்ளது. மேலும் பலாலி விமான நிலையத்தை நாம் யாழ்ப்பாண விமான நிலையம் என்கின்ற பெயரில் அதை நாம் அபிருத்தி செய்து வருகின்றோம்

முதலாவது கட்டமாக இந்தியாவுக்கு மாத்திரம் தான் விமான சேவை இடம்பெறும். ஆனாலும் காலக்கிரமத்தில் அது சர்தேச மட்டத்தில் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்யும் விமான நிலையமாக மாறும் என்பதை கூறிக்கொள்கின்றேன்.

இதன்மூலம் சுற்றுலாத்துறையும் அபிவிருத்தியடையும். சுற்றுலாப் பயணிகளை இந்த பிரதேசத்திற்கு ஈர்த்துக்கொள்வதற்கு குறிப்பாக தீவுப் பிரதேசங்களுக்கு ஈர்த்துக்கொள்வதற்கு என்ன செய்யவேண்டும் அதற்கான மூலோபாயங்கள் என்ன என்பதை சிந்தித்து வருகின்றோம் அதற்கான திட்டங்களை உருவாக்கி வருகின்றோம். இதனை பிரதான சுற்றுலா வலயமாக்கவுள்ளோம். காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்துவருகிறோம் அத்துடன் சீமெந்து தொழிற்சாலையையும் மீள இயக்கவும் திட்டமிட்டுள்ளோம். புதிய தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளைஆரம்பிக்கவுள்ளோம். கிளிநொச்சி , பூநகரியையயும் அபிவிருத்தி செய்யவுள்ளோம் இதுவொரு பாரிய திட்டமாகும்.

வர்த்தகம் தொழிற்முயற்சிகளையும் கட்டியெழுப்பவுள்ளோம் இதற்கென புதிய நிதியத்தை ஸ்தாபிக்கவுள்ளோம். என்றார்.

கருத்து தெரிவிக்க