உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

குடு ரொஷான் உள்ளிட்ட 7 சந்தேகநபர்கள் கைது

கொலை சம்பவம் தொடர்பில் குடு ரொஷான் உள்ளிட்ட 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த 7 பேரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரான்ட்பாஸ் பகுதியில் வைத்து பாதாள உலக்குழு உறுப்பினர்கள் இருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க