சினிமா

சத்யராஜின் படத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் சிபிராஜின் ‘வால்டர்’

சத்யராஜ் ‘வெற்றிவேல்’ படத்தின் இன்ஸ்பிரேஷனில் சிபிராஜ் நடிக்கும் படம் “வால்டர்” . இப்படத்தினை அன்பரசன் இயக்குகிறார். அதில் அப்பாவும் மகனும் பொலிஸ் அதிகாரி. ஷிரின் காஞ்சனவாலா ஹீரோயின். இயக்குனர் கவுதம் மேனன், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் கும்பகோணத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடக்கவிருக்கிறது.இதுகுறித்த தயாரிப்பாளர் டாக்டர் பிரபு திலக் கூறியிருப்பதாவது: முதல் கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் வெற்றிகரமாக நடந்துள்ளது. திட்டமிட்டபடி இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடத்தவுள்ளதாகவும் இயக்குனர் கௌதம் மேனன் அடுத்த கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் இயக்குனர் அன்பரசன் இப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை கதையை சரியாக திட்டமிட்டுள்ளதாகவும் இது ஒரு விறுவிறுப்பான திரில்லர் திரைப்படம் எனவும் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சிபிராஜ் பொலிஸ் அதிகாரியாக நடிக்கின்றார் எனவும் கூறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க