உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘ஊடகத் துறைக்கான வித்தகர் விருதினைப் பெறுகிறார் ஏ.எம்.ஏ.பரீத்’

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2019 ஆண்டுக்கான கிழக்கு மாகாண
தமிழ் இலக்கிய விழாவில் கௌரவிக்கப்படும் பல்துறை கலைஞர்கள் ,இலக்கிய
வாதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இக் கௌரவிப்பு வழமைபோல் வித்தகர் விருது, சிறந்த நூலுக்கான பரிசு, இளம்கலைஞர்
விருது, அரச படைப் பாக்கம் என்பவற்றில் தெரிவானவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி.வளர்மதி
ரவீந்திரன் தெரிவித்துள்ளார்

இதில் கிண்ணியாவை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் (ஓய்வு பெற்ற ஆசிரியர்] அப்துல் முத்தலிப் அப்துல் பரீத் என்பவருக்கு ஊடகத் துறைக்கான வித்தகர் விருது
கிடைக்கப்பெற்றுள்ளது.

இவர் ஊடகத் துறையில் சுமார் 38 வருட கால அனுபவத்தை பெற்றவருமாவார்.

இவர் கிண்ணியாவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் அப்துல்
முத்தலில் ,செய்துன் பீவி ஆகியோர்களின் கனிஷ்ட புதல்வருமாவார்.

கருத்து தெரிவிக்க