உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பூஜித – ஹேமசிறி, எதிரான மனு விசாரணை 06ம் திகதி ஆரம்பம்

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மீளாய்வு விண்ணப்பம் தொடர்பான விசாரணையை ஆரம்பிக்க தீர்மானம்.

இதனை, எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி இன்று உத்தரவிட்டுள்ளார்.

எழுத்துமூலமான அடிப்படை எதிர்ப்பை சமர்பிப்பது குறித்து ஆராய்வதற்காக, குறித்த மீளாய்வு விண்ணப்பம் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தால் கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது.

ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை தடுப்பதற்கான இயலுமை காணப்பட்ட போதிலும், அது குறித்து நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினாரால் இவர்களுக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க