மக்களின் தேவை அறிந்து சேவைகளை செய்யக்கூடிய அரசியல் நடவடிக்கைகளை
நாமும் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் செயற்பட்டு வருகிறோம் என
துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும்
திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான டாக்டர் ஹில்மி முகைதீன்
பாவா தெரிவித்தார்
தம்பலகாம பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான
இன்று (02) திங்கட் கிழமை இலவச குடி நீர், மின்சார இணைப்புக்கள் மற்றும் இரு கிராம
அபிவிருத்திச் சங்கங்களுக்கான தளபாடங்கள் என்பன வழங்கும் நிகழ்வில் பிரதம
அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்
எமது கட்சியின் தலைமை மக்களின் வாழ்வாதார விடயங்களை நன்கறிந்தவர் கட்சிக்கு
அப்பால் பல அபிவிருத்திகள் மாவட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் இடம் பெற்று
வருகிறது.
இவ்வாறான நலன்கருதிய சேவைகளை முன்னிலைப்படுத்தி செய்வதன்
ஊடாக கட்சியின் தலைமையின் கையைப் பலப்படுத்த முடியும் சிறுபான்மை சமூகத்தின்
உரிமைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் எமக்காக தோல் கொடுக்கும் சக்தியாக அமைச்சர்
றிசாத் தொடர்ந்து வருகிறார்
வாழ்வாதார திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் அனைத்து இன மக்களும்
சமூகத்தின் ஒற்றுமையின் பால் இந்த பூமியில் வாழ வேண்டும் இதனை தான் எமது
கட்சி விரும்புகிறது.
சகல இன மக்களையும் அரவனைத்து எல்லோருக்கும்
பொதுவானதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்றார்.
கருத்து தெரிவிக்க