உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இளவயதுத் திருமணம் தொடர்பிலான விழிப்புணர்வு

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் இளவயது திருமணத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் வவுனியா மாவட்டச் செயலயத்தின் சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்திக் குளுவின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு கருத்தமர்வொன்று இன்று 02.09  இடம் பெற்றது.

இள வயதுத் திருமணத்தின் தாக்கம் அதிகம் காணப்படும் காத்தார் சின்னக்குளம் கிராமசேவகர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே குறித்த கருத்தமர்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாவட்ட சிறுவன்மேம்பாட்டு அதிகாரி யே. யெஜகணடி , தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட பொறுப்பதிகாரி செல்வகுமார், ஆகிய இருவரும் வளவாளராகக் கலந்து கொண்டு இளவயதுத் திருமணத்தினால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் சமூக சீர்கேடுகள் தொடர்பிலான கருத்துரைகளை வழங்கினார்கள்.
குறித்த நிகழ்வில் இள வயது யுவதிகள், பெண்கள், மற்றும் பொது அமைப்புக்களின் தலைவர்கள் காத்தார் சின்னக்குளம் கிராமசேவையாளர்,  காத்தார் சின்னக்குளம் சிறுவர் பாதுகாப்பு குழுவின் செயலாளர் தினேஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கருத்து தெரிவிக்க