உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன் – பிரதமர்

நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவே தாம் அரசியலுக்கு வந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பலவற்றை நேற்று மக்களிடம் கையளிக்கும் நிகழ்விலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்கலைக்கழக துறையில் மற்றுமொரு வைத்தியபீடம் வயம்ப பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது.

மூன்றாவது பல்கலைக்கழகம் விரைவில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இங்கு உரையாற்றுகையில் கல்விக்காக பாரிய முதலீடு மேற்கொள்ளப்படுகிறது.

சமீப காலத்தில் கல்வி கட்டமைப்புக்குள் 13 வருட தொடர்ச்சியான கல்வி வேலைத்திட்டம், அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை, ‘சுரக்ஷா’ காப்புறுதி ஆகியன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இம்முறை கல்வியியல் கல்லூரிக்கு 8,000 மாணவர்கள் ஒரே முறையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் இணைத்துக் கொள்ளப்படும் 16 ஆயிரம் பட்டதாரிகளில் 5,000 பேர் ஆசிரியர்களாக கல்விக் கட்டமைப்புக்குக்குள் உள்வாங்கப்படுவார்கள் என்றும், இதனால் ஆசிரியர் பற்றாக்குறை முழுமையாக நீங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

[ அரச செய்தி திணைக்களம் ]

கருத்து தெரிவிக்க