அவசரகால சட்டம் கடந்த வாரம் தளாத்தப்பட்ட நிலையில் முகத்தை மூடிய ஆடைகளை அணிந்திருந்த நான்கு பெண்கள் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்றுள்ளது.
வர்த்தகர் ஒருவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே வான் படையினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர்.
இதன்பின்னர் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் தலையீட்டில் அவர்கள் நான்கு பேரும் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் முகத்தை மூடிய ஆடைகள் தொடர்பில் உத்தியோகபூர்வ நிலைப்பாடு இல்லாவிட்டாலும் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரையில் அது தடைசெய்யப்பட்டுள்ளது.
எனவே சமூகத்தலைவர்கள் இதனை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்
கருத்து தெரிவிக்க