பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தி அதனை மேம்படுத்துவதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது இலக்காகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரிய அரசாங்கத்தின் நிதியுதவியில் குளியாபிட்டியில் அமைக்கப்பட்டுள்ள தொழிநுட்ப கல்லூரியின் நிர்மாண பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் நவீன மயத்தையும் முன்னெடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் முதலாவது தொழில்நுட்ப கல்வியில் கல்லூரி நிர்மாணிக்கப்படுகிறது;இதற்காக கொரிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
தரம் 13க்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை உறுதி செய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் இறுதி 2 ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் இதன் மூலம் உருவாக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க