உள்நாட்டு செய்திகள்புதியவை

‘தமிழ் குடும்பம் நாடு கடத்தப்படுவது அகதிகளுக்கு ஆபத்து’

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், தமிழ் குடும்பமொன்றை நாடு கடத்த எடுக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அங்குள்ள 6 ஆயிரம் தமிழ் அகதிகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று அகதிகள் தொடர்பாக செயற்படும் சட்டத்தரணி ஒருவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

நடேசலிங்கம் பிரியா தம்பதியினரும் அவர்களின் இரண்டு குழந்தைகளும் நேற்று இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அந்த முயற்சி தடுக்கப்பட்டது.

அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த குடும்பத்தின் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சட்டத்தரணி ஒருவர் பாதுகாப்பு கருதியே இந்த குடும்பம் அவுஸ்ரேலியாவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவுஸ்ரேலிய பிரதமர் மனிதாபிமானமான முறையில் அவர்களை அவுஸ்ரேலியாவில் தங்க அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார் என குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க