உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

வவுனியா மாவட்டத்தில் முதற்தடவையாக சமுர்த்தி கட்டிடம்

வவுனியா மறவன் குளம் கிராமத்திற்கான சமுர்த்தி பயனாளிகள் தங்களின் பல்தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கட்டிடத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீடு மூலம் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது

மறவன் குளம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகர் ரமேஷ், அக் கட்சியின் அமைப்பாளர் ஜூட் மற்றும் சமுர்த்தி சங்கங்கள், கிராம மட்ட அமைப்புகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அமைச்சரின் பிரதிநிதிகளான இணைப்புச் செயலாளர் முத்து முகமட் , நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் பாரீ .நகர சபை உறுப்பினரும் சமுர்த்தி உத்தியோகருமான ஏ.ஆர்.எம்.லரீப், அபிவிருத்தி உத்தியோகர் சதீஸ் , கிராம சேவையாளர், பொலிஸ் பொறுப்பதிகாரி, கிராம மக்கள் என பலரும் கலந்திருந்தனர்.

கருத்து தெரிவிக்க