உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு மாத கொடுப்பனவு

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கு அமைய, குறித்த சான்றிதழைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்தவாரமளவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நபர் ஒருவர் காணாமலாக்கப்பட்டுள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு, காணாமல்போனோர் அலுவலகத்தினால் வழங்கப்படுகிறது.

எனினும் அந்த நபர் உயிரிழந்துள்ளார் என்ற அடிப்படையில் வழங்கப்படுவதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினர் தெரிவித்து
குறித்த சான்றிதழை பெற மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, சுமார் 500 பேர் வரையில் குறித்த சான்றிதழைப் பெற்றுக்கொண்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இலங்கையில்பல பாகங்களில் பாரியளவிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடததக்கது.

கருத்து தெரிவிக்க