சினிமா

புதிய டிவி சேனல் ஆரம்பிக்கவுள்ள கமல்!

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கி உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலிலும் களமிறங்கி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தாலும் பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது, நான்காவது இடத்தை பிடித்தனர் அவரது கட்சி வேட்பாளர்கள்.

இந்நிலையில் அடுத்தப்படியாக சட்டசபை தேர்தலை குறி வைத்துள்ளார் கமல். பொதுவாக அரசியல் கட்சியினருக்கு அவர்கள் சார்ந்து ஒரு டிவி சேனல் வேண்டும். அந்தவகையில் நதியின் பெயரை கொண்ட ஒரு சேனலை கமல் கட்சி சார்பில் வாங்கி இருப்பதாகவும், கமலின் பிறந்தநாள் முதல் இந்த டிவி சேனல் புதிய பரிமாணத்தோடு களமிறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதை மெய்பிக்கும் வகையில், கமல் கட்சியில் துணை தலைவராக இருக்கும் மகேந்திரன், ‛‛மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக டிவி சேனல் துவங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது” என கூறியுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க