உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மினுவான்தெனிய பிரதான வீதி காபட் வீதியாக செப்பணிட்டு மக்கள் பாவனைக்கு கையளிப்பு

கினிகத்தேனை- மினுவான்தெனிய இட்டிகேகம, உடபொல்கஸ்வத்த ஊடாக தெரணியகல செல்லும் பிரதான வீதியை காபட் வீதியாக செப்பணிட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு 29.08.2019 அன்று மினுவான்தெனிய பகுதியில் இடம்பெற்றது.

சுமார் 8 கிலோ மீற்றர் கொண்ட இந்த காபட் வீதிக்கு நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸ, வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த வீதியை ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும், நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாசிம் கையளித்தார்.

கருத்து தெரிவிக்க