தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தனது ஊழியர்களின் எண்ணிக்கையை விட 95 சதவீதத்தால் அங்கீகரிக்கப்படாத ஊழியர்களை நியமித்தமை தெரியவந்துள்ளது.
சாட்சியாளர் ஒருவர் இன்று (ஆகஸ்ட் 28) அரசத்துறை ஊழல் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணையத்திடம் இதனை தெரிவித்துள்ளார்.
அதிகாரசபை அதன் தலைமை அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு 4,500 க்கும் மேற்பட்ட ஊழியர்களை நியமித்திருந்தாலும் அதிகபட்ச ஊழியர்கள் 2,164 ஆக உள்ளனர் என முன்னாள் நிர்வாக அதிகாரி எல்.எச்.டி. என்று பிரியா பெரேரா கூறியுள்ளார்.
இந்த நியமனங்கள் நிதி அமைச்சின் முகாமை சேவைகள் துறையின் அனுமதி பெறாமல் வழங்கப்பட்டுள்ளன, என்று அவர் மேலும் கூறினார்.
அதிகபட்சம் 77 ஊழியர்களை மட்டுமே அனுமதித்த போதிலும் 1400 நபர்கள் ஹம்பாந்தோட்டை மாவட்ட அலுவலகத்திற்கு
இணைத்து கொல்லப்பட்டுள்ளனர் என்று சாட்சியாளர் மேலும் கூறினார்.
கருத்து தெரிவிக்க