மஸ்கெலிய பெருந்தோட்ட கம்பனியால் நிர்வகித்து வரும் மஸ்கெலிய சாமிமலை டீசைட் தோட்டத் தொழிலாளர்கள் இன்று 27/8/2019 காலை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் .
குறித்த தோட்ட நிர்வாகத்தால் தமக்கு அநீதி இழைக்கபடுவதாக தொழிலாளர்கள் சுட்டிகாட்டுகின்றனர் .
அந்த வகையில் தற்போதைய காலநிலை மாற்றத்தால் தேயிலை கொழுந்தின் வளர்ச்சி குறைவடைந்துள்ள நிலையில் ஒரு நாள் பெயருக்கு 16 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் அவ்வாறு பறிக்காத படத்தில் தமக்கு அறைபெயர் போடப்படுகிறது.
மேலும் தோட்டம் காடாகி வருகின்ற நிலையில் ஆன் தொழிலாளர்களையும் கொழுந்து பறிக்குமாறு வலியுறுத்துவதாகவும் தோட்டத்தை துப்புறவு செய்வதற்கு மறுப்பு தெரிவித்து வருவதாகவும் இது குறித்து நேற்றைய தினம் தோட்ட முகாமையாளரிடம் கேட்டப்போது
குறித்த தோட்டம் நட்டத்தில் இயங்குவதாக குறிப்பிட்டதை தொடர்ந்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர் .
மேலும் இது குறித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் சாமிமலை கிளை காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க