காணாமல் போனவர்களின் உறவினர்களின் வலி எனக்குத் தெரியும்.
தன்னுடைய உறவினர்களும் காணாமல் போயிருக்கின்றதாகக் குறிப்பிட்டிருக்கும் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா என்மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்திய முல்லைத்தீவு மாவட்ட காணாமலாக்கப்பட்ட சங்கத் தலைவி சுரேஸ் ஈஸ்வரிக்கு எதிராக கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று ஊடகவியியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது..
கடந்த காலங்களில் கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளில் நான் உட்பட சிலர் ஈடுபட்டதாக குறித்த சங்கத்தலைவி ஓர் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். அவரது கருத்து தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.
ஆனால் அவர் என்ன நோக்கத்துக்காக அதனை தெரிவித்தார் என்று தெரியவில்லை. ஆனால் ஆதாரம் இல்லாத குற்றச்சட்டுக்களாகவே அதனை நான் பார்கின்றேன்.
குறிப்பாக காணமல் ஆக்கபட்ட சங்கத் தலைவி நான் படுகொலை, கடத்தலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.
அப்படியாயின் நான் கடத்தல் படுகொலைகளில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் அவரிடம் இருந்தால் அதனை சமர்ப்பிக்க வேண்டும் என எனது முறைப்பாட்டில் கோரியுள்ளேன் என்றார்.[ நிருபர் தம்பிராஜா பிரதீபன் ]
கருத்து தெரிவிக்க